ஞானசேகரனை பிப்ரவரி 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!

 
anna univ

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை பிப்ரவரி 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஞானசேகரனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.  7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அவரிடம் பல்வேறு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை பிப்ரவரி 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது.. சிறப்பு புலனாய்வு குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.