பொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு!

 

பொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு!

இரண்டாம் செமஸ்டர் & இறுதி செமஸ்டர் தவிர பிற பொறியியல் மாணவர்களுக்கு ஏப்ரல் – மே செமஸ்டருக்கான வகுப்புகள் பிப்., 18 முதல் மே 21 வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதேபோல் ஜூன் 2-ல் எழுத்துத் தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு வரும் பிப்., 14 – ஏப்., 12 வரை வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான முதல் தேர்வு ஏப்., 26 ஆம் தேதி தொடங்குகிறது.

பொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு!

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இரண்டாம் செமஸ்டர் & இறுதி செமஸ்டர் தவிர பிற மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் பிப்ரவரி 18-ம் தேதி தொடங்கும்.

  • மே 21-ம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும்.
  • மே 24-ல் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும்.
  • ஜூன் 2-ல் எழுத்துத் தேர்வு தொடங்கும்.

இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 14-ல் வகுப்புகள் தொடங்கும்.

*ஏப்ரல் 12 வரை வகுப்புகள் நடைபெறும்.

*ஏப்ரல் 15 முதல் செய்முறைத் தேர்வு.

*ஏப்ரல் 26 முதல் எழுத்துத் தேர்வு.

*அடுத்த கல்வியாண்டுக்கான ( 2021-2022 ) வகுப்புகள் ஜூலை 1-ம் தேதி தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.