‘அண்ணா வெறும் பெயரல்ல.. தமிழ்நாட்டின் அடையாளம்’ - திமுக எம்.பி., கனிமொழி..
‘அண்ணா’வெறும் பெயரல்ல.. தமிழ்நாட்டின் அடையாளம் என பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாளை ஒட்டி தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 116-வது ஆண்டு பிறந்த தினம் இன்று, தமிழ்நாடு முழுவதும் திராவிட கட்சிகளால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி, சென்னை அண்ணா சாலை அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது சாதனைகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் திமுக மகளிரணி செயலாளரும், துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எக்ஸ் தளத்தில் அண்ணா குறித்து பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், “‘அண்ணா’ வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல் - பண்பாட்டின் குறியீடு - உரிமைப்போரின் முன்னோடி - தமிழ்நாட்டின் அடையாளம் - திராவிட மாடலின் தொடக்கம். சமூகநீதி - சுயமரியாதை - மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர். திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கமாய் என்றென்றும் வழிகாட்டும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘அண்ணா’ வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல் - பண்பாட்டின் குறியீடு - உரிமைப்போரின் முன்னோடி - தமிழ்நாட்டின் அடையாளம் - திராவிட மாடலின் தொடக்கம். சமூகநீதி - சுயமரியாதை - மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர். திராவிட இயக்கத்தின்… pic.twitter.com/f4cRNDLphk
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 15, 2024