அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல்: பெரியார் திடலில் திரண்ட தலைவர்கள்!
தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு (TSYF) சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த அனிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுவதாக இருந்தது. காவல்துறையினரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நிகழ்வு சென்னை பெரியார் திடலுக்கு மாற்றப்பட்டு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு தங்கை அனிதாவுக்கு நினைவேந்தல் செலுத்தினர்.
நிகழ்வில், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி, நடிகர் சத்யராஜ், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், எஸ்டிபிஐ மாநில துணைத் தலைவர், அசார் உமர் பாரூக், மனிதநேய மக்கள் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் சமது , திமுக மாநில மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பொதுச் செயலாளர் தியாகு, திவிக பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையச் செயலாளர் நிஜாமுதின், அற்புதம்மாள், மே 17 இயக்கம் விவேகானந்தன், தேமுதிக தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி,தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் இளமாறன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அனிதாவின் கல்வி உரிமை மற்றும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களின் கல்வி உரிமை, சமூகநீதி மற்றும் சமத்துவம் தொடர்பான கருத்துகள் வலியுறுத்தப்பட்டன. இந்நிகழ்வை தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு (TSYF) சார்பில் கஸ்ஸாலி மீரான், இளையராஜா, பிரபாகரன், அசாருதீன், வினோத் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

