“கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்! ஆதவ்வால் ராஜினாமா செய்ய முடியுமா?’’- அனிதா ராதாகிருஷ்ணன் சவால்
கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள் என திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ஸ்டாலினை தோற்கடித்த கொளத்தூர் மக்கள் கேடுகெட்ட மக்கள் என பேசியிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்..!
— Dr.R.Gayatri Suresh, ரௌத்ரம் பழகு (@r_gayatrisuresh) May 17, 2026
இதுதான் திராவிடம்.. இந்த பேச்சுக்கு தான் இப்போது ஆட்சியை இழந்து நிற்கிறீர்கள் @arivalayam@NainarBJP @annamalai_k @BJP4TamilNadu pic.twitter.com/SH6QdAPnK5
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “முடிந்தால் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு முடிந்தால் என்னை வென்று காட்டட்டும். இருவரும் திருச்செந்தூரில் போட்டிப்போட்டு பார்க்கலாமா? எந்த வகையிலும், எவரையும் வீழ்த்திவிட முடியும். இன்னும் 4 மாதம் தான் இந்த ஆட்சி இருக்கும். மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரை சிங்கப்பூர் போன்று மாற்றி வைத்திருந்தார். ஆனால் கொளத்தூர் தொகுதி மக்கள் கேடு கெட்டவர்கள். 4 முதல் 6 மாதங்களில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்" என்றார்.

