“நான் ஏமாந்துட்டேன்”... ஆன்லைனில் ஆர்டர் செய்த அனிதா சம்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி!

 
“நான் ஏமாந்துட்டேன்”... ஆன்லைனில் ஆர்டர் செய்த அனிதா சம்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அழுகை, சிரிப்பு, கோபம் என பல முகங்களை வெளிப்படுத்திய அனிதா சம்பத், அந்நிகழ்ச்சியின் 84ஆவது நாளில் எவிக்ட் செய்யப்பட்டார். 

ஆன்லைனில் ஆர்டர் செய்த அனிதா...பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி - இப்படியும் நடக்குதா? | Anitha Sampath Disappointed On Amazon

தற்போது யூடியூப், மாடலிங், இன்புளூயன்சர் என கலக்கி வரும் அனிதா சம்பத், அமேசானில் ஸ்டோரேஜ் பாக்ஸ் ஒன்று ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் அவருக்கு அழுக்கான புடவை ஒன்று டெலிவரி ஆனது. இதனை வேதனையுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனிதா சம்பத், “நான்ன் ஸ்டோரேஜ் பாக்ஸ் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த நிலையில் அமேசானில் ஆர்டர் போட்டு இருந்தேன். கடந்த ஜூன் 13ஆம் தேதி அந்த பொருள் எனக்கு டெலிவரி ஆனது. அந்த பொருளின் விலை 899 ரூபாய்.  அந்த நேரத்தில் எனக்கு பல டெலிவரி வந்து இருந்தது. நானும் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் இந்த பாக்ஸை பிரிக்கவில்லை. இன்று இந்த பாக்ஸை பிரித்துப் பார்க்கிறேன். உள்ளே அழுக்கு பிடித்த புடவை இருந்தது. ரிட்டர்ன் போடவேண்டிய தேதியும் முடிந்துவிட்டது. கையால் என்ன பண்றது தெரியவில்லை. இதற்கு அமேசான் நிறுவனத்தில் இருந்து எனக்கு பதில் சொல்ல வேண்டும். நான் இதற்கு என்ன செய்யலாம் என்று ரசிகர்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்” எனக் கூறியுள்ளார்.