வாக்குவாதத்தில் ஈடுபட்ட அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் கூண்டோடு கைது
Jul 3, 2026, 16:41 IST1783077061656
தூத்துக்குடி எஸ்பி அலுவலகம் முன்பு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும் அவதூறாகவும் பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனு தள்ளுபடியான 90 நிமிடங்களில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூரில் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதை அடுத்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் செய்த 10 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக்கூறி காவல் துறை கைது செய்தது.

