"கர்நாடக போனா புடிச்சி கட்டி வெச்சிடுவாங்கனு... விஜய் ஹெலிகாப்டர்ல போய் ஆய்வு பண்ண போறேன்ங்கா.."- அனிதா ராதாகிருஷ்ணன்
பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசி விமர்சித்த முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனின் வீடியோ வைரலாகிவருகிறது.

அந்த வீடியோவில், “விஜய் இங்க யாருக்காவது உதவி செய்திருக்கிறாரா? அப்பேற்பட்டவன டான்ஸ் ஆடுறானு சொல்லி வாட்ஸ் அப்பில் போட்டு முதலமைச்சர் ஆக்கிட்டா இன்னைக்கு தமிழ்நாடு என்ன ஆகுறது? காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு என்ன பாடு படுகிறது? காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஹெலிகாப்டர்ல போய் ஆய்வு பண்ண போறேன்ங்கா.. கர்நாடக போனா புடிச்சி கட்டி வெச்சிடுவாங்கனு, தேவையில்லாமல் ஒரு மாநிலத்தில் போய் மாட்டி, அங்க கையெழுத்து போட்டு, நம்ம மாநிலம் கெட்டுப்போக கூடாதுல... இதையெல்லாம் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். திமுக ஆட்சியில் மகளிருக்கு மாதம் ரூ.1,000, இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு ரூ.1,000, காலை உணவுத்திட்டம் உள்ளிட்டவை குறித்து மக்களிடம் சொல்ல வேண்டும். கதைவிட்டு கொண்டு ஏமாற்றும் வேலையை விஜய் பார்த்து கொண்டிருக்கிறான். இதை நம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்றார்.

