“6 மாசம்தான்... இந்த ஆட்சியை நீடிக்க விடமாட்டோம்”- அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

 
ச்

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி இன்னும் 6 மாதங்கள் கூட நீடிக்காது. நீடிக்கவும் விட மாட்டோம் என திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். 

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன், மருத்துவ பரிசோதனைக்கு பின்  பேட்டியளித்தார். அப்போது பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “தவெகவில் சேருமாறு கூறினார்கள், ஆனால் தமிழக வெற்றிக் கழக அரசின் குதிரை பேர அரசியல் எங்களிடம் நடக்காது. குதிரை பேரம் அல்ல, ஒட்டக பேரம் நடந்தது. எதற்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி இன்னும் 6 மாதங்கள் கூட நீடிக்காது. நீடிக்கவும் விட மாட்டோம். இன்று வந்த கட்சிக்கு நாங்கள் பயப்படுவோமா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை தைரியமாக இருக்கச் சொல்லி இருக்கிறார். அந்த தெம்போடு எந்த பிரச்சனையையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். போலீஸ் என்னை தாக்கினால் நான் திருப்பி தாக்குவேன். ஜூலை 10ஆம் தேதி ஆஜராக இருந்தேன். ஆனால் பயம் காட்டவேண்டும் என என்னை அவசரமாக கைது செய்துள்ளனர்.” என்றார்.