முதலமைச்சர் குறித்து அவதூறு- அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமீன் கோரி மனு

 
அ

முதல்வர் விஜய் குறித்து ஒருமையில் பேசிய விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை நாடினார் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

“கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்! ஆதவ்வால் ராஜினாமா செய்ய முடியுமா?’’- அனிதா ராதாகிருஷ்ணன்

முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவில், ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து பிரதான எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. என்ற முறையில் பேசினேன் என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.