அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை
Nov 3, 2026, 17:05 IST1793705710726
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
2001 -2006 வரை அதிமுக ஆட்சி காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.08 கோடி சொத்துக்குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா் அனிதா ராதாகிருஷ்ணன், போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கிலிருந்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது. வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணனின் மனைவி ஜெயகாந்தி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவித்து நீதிபதி சுபா தேவி உத்தரவு பிறப்பித்துள்ளார். 20 ஆண்டுகளாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

