அனிருத் - காவ்யா மாறன் திருமண புகைப்படங்கள் வைரல்

 
அனிருத்

இன்று அனிருத் - காவ்யா மாறன் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. திருமணம் குறித்தான புகைப்படங்கள் இணையத்தில் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது அனிருத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். 

Image


இசையமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண விழா கொண்டாட்டங்கள் கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற்றுவருகின்றன, சினிமா மற்றும் அரசியல் உலகைச் சேர்ந்த பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் இந்தத் திருமணத்தின் முதன்மைக் சடங்குகள் மற்றும் விழாக்கள் நேற்றும், இன்றும் கிரீஸில் நடைபெற்றன.  இதனையடுத்து நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடனும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி & மகன் உதயநிதி ஸ்டாலினுடன் உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் இந்தத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.