23 வகை நாய்களுக்கு தடை விதித்த உத்தரவு வாபஸ்!!

 
govt

23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை கால்நடை பராமரிப்பு துறை திரும்ப பெற்றது.  

1

நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முகக்வசம் அணிந்து அழைத்து செல்லவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியது. பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வைலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் என பொதுவாக அழைக்கப்படும் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

govt
இந்நிலையில்  23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை திரும்ப பெற்றது கால்நடை பராமரிப்பு துறை. மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி தடை உத்தரவை தமிழக அரசு அறிவித்திருந்தது.  மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதால் தமிழக கால்நடை பராமரிப்பு துறை பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.