அங்கன்வாடி அட்டூழியங்கள்! குழந்தைக்கு தீய்ந்துபோன முட்டை கொடுத்த கொடூரம்
திங்கள்நகர் அருகே உள்ள மேக்கன்கரை குழந்தைகள் மையத்தில் குழந்தைக்கு எரிந்து கரிந்த தீஞ்ச முட்டையை வழங்கிய அங்கன்வாடி ஊழியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே உள்ள மேக்கன்கரை பகுதியில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெற்று வரும் நிலையில் குழந்தைகளை கண்காணிக்க ஒரே ஒரு ஊழியர் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொடுமுட்டி பகுதியை சேர்ந்த அனீஷ் ரம்யா தம்பதியரின் குழந்தையும், அதே மையத்தில் பயன்பெற்று வரும் நிலையில் கடந்த திங்கள்கிழமை மதியம் தம்பதியர் குழந்தையை எடுக்க சென்ற போது குழந்தைக்கு மதியம் வழங்கப்பட்ட முட்டை எரிந்து கரிந்து தீஞ்ச நிலையில் இருந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தந்தை அனீஷ் அங்கன்வாடி ஊழியரிடம் முட்டையைக் காட்டி, “இதை குழந்தை சாப்பிட்டிருந்தால் என்னவாகும்? என தட்டி கேட்டபோது அங்கன்வாடி ஊழியர் தெரியாமல் நடந்து விட்டது. “வேறு முட்டை கொடுக்கிறேன், பிரச்சனை பண்ணாதீர்கள்... நான் ஒத்தையாக இருக்கிறேன், பிள்ளைகளையும் பாக்கணும், குழந்தைகளையும் பார்க்கணும்” என கூடுதல் ஊழியர்கள் இல்லாததை சுட்டிக்காட்டினார். “உங்களிடம் மன்னிப்பு கேட்டேன் இனி நீங்கள் என்னை
அடிக்க போறீங்களா? இல்லை கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுக்கவா போறீங்?க கொடுப்பா... கொடு.. நான் உங்ககிட்ட பெருசா பேச வரல... நான் செஞ்சது தப்பு தான் ” என பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


