பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்கிறார் ஆன்டி பர்ன்ஹாம் !

 
1

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கடந்த மே மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தொழிலாளர் கட்சி பின்னடைவை சந்தித்தது. இதன் காரணமாக ஆளும் தொழிலாளர் கட்சிக்குள் பூசல் வெடித்தது.

இதையடுத்து, கட்சி தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமர் பொறுப்புகளில் இருந்து கீர் ஸ்டார்மர் கடந்த மாதம் 22ல் விலகுவதாக அறிவித்தார். கட்சி தலைவர் மற்றும் அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் வரை ஸ்டார்மர் தற்காலிகமாக தலைமை பதவியை வகித்து வருகிறார். இந்நிலையில் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில், கிரேட்டர் மான்செஸ்டர் நகரின் முன்னாள் மேயரும், சமீபத்தில் நடந்த தேர்தல் வாயிலாக மீண்டும் அந்நாட்டு பார்லிமென்டுக்கு தேர்வானவருமான ஆண்டி பர்ன்ஹாம் தவிர யாரும் போட்டியிடவில்லை.

இதையடுத்து, 403 தொழிலாளர் கட்சி எம்.பி.,களில் 379 பேரின் பெரும் ஆதரவை பர்ஹாம் பெற்றதையடுத்து, கட்சியின் புதிய தலைவராக முறைப்படி நேற்று அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, வரும் 20ம் தேதி மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்து தன் ராஜினாமா கடிதத்தை முறைப்படி வழங்க இருக்கிறார் கீர் ஸ்டார்மர். அதன்பின், புதிய அரசு அமைக்க ஆண்டி பர்ன்ஹாமுக்கு மன்னர் அழைப்பு விடுப்பார். அழைப்பை தொடர்ந்து புதிய பிரதமராக அவர் பதவியேற்பார். 2016ம் ஆண்டிற்கு பின், 10 ஆண்டுகளில் பிரிட்டனின் 7வது பிரதமராக ஆண்டி பர்ஹாம் பதவியேற்க உள்ளார்.