டெல்லியை தமிழ்நாடு வென்றது என பேசி மசோதாக்களை தோற்கடித்ததால் என்ன சாதித்தீர்கள்?- சந்திரபாபு நாயுடு
டெல்லியை தமிழ்நாடு வென்றது என பேசி, மசோதாக்களை தோற்கடித்ததால் என்ன சாதித்தீர்கள்? என கோவையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தளி தொகுதி தேன்கனிக்கோட்டையில், தளி தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் நாகேஷ் குமார், ஓசூர் தொகுதி அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகிய NDA கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் உறையாற்றினார். அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, “அனைவருக்கும் வணக்கம், என் பிறந்த நாளில் இங்கே இருப்பது மிகவும் சந்தோசம், மாற்றம் வேண்டும் என்பது உங்களை பார்த்தால் தெரிகிறது. கவலைப்பட வேண்டாம் 15 நாட்களில் மாற்றம் வரும். நம் வீட்டில் மனைவி, சகோதரி, மகள் என பெண்கள் உள்ளனர்.. பெண்களுக்கு 33% விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க நினைத்தவர் மோடி.... டெல்லிக்கு தமிழ்நாட்டிற்கு போட்டி எனக்கூறி என்ன சாதித்தார்கள்.. நான் மூத்த அரசியல்வாதியாக கேட்கிறேன்.. தமிழகத்தில் 20 எம்பிக்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்கும்.. அதிலும் 33% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டிருக்கிறோம்..நாங்கள் வென்றோம், மோடியை வென்றோம் என்கிறார்கள்.. ஆனால் நீங்கள் பெண்களை ஏமாற்றி உள்ளீர்கள். இதற்கான பதிலடி கொடுக்க இருக்கிறார்கள்.. டபுள் எஞ்சின் அவசியம். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாடு பெண்களுக்கு எதிரான துரோகம். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே.
தென்னிந்தியாவில் 130 என்றிருந்த எம்பிக்கள் எண்ணிக்கை 195 ஆக அதிகரிக்க மத்திய அரசு உறுதியளித்தது. இதில் நமக்கு என்ன அநீதி விளைக்கப்படுகிறது? தமிழ் மக்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வல்லுநர்களாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்கள்போல் வேறு எங்கும் இல்லை. ஒருக்காலத்தில் தமிழகம் அனைத்திலும் முன்னிலையில் இருக்கும், ஆனால் இப்போது கீழே உள்ளது... பெங்களூர், ஹைத்ராபாத்துடன் போட்டி போடும் நிலையில் சென்னை உள்ளதா..? தமிழகத்தில் போதை பொருட்கள், மக்கள் மீதான கடன் சுமை அதிகரிப்பை தவிர இந்த திமுக அரசு எதையும் சாதிக்கவில்லை. ஊழல் இல்லாத கிராமம் இல்லை, நாசம் செய்யாத நகரம் இல்லை, திமுக தோற்க வேண்டும், தமிழகம் வெல்ல வேண்டும். முன்னேற்றம், வேலைவாய்ப்பு வேண்டுமா அப்படியானால் மத்தியில் மோடி, மாநிலத்தில் அம்மா ஆட்சி இருக்க வேண்டும், என்டிஏ கூட்டணியை ஆதரியுங்கள்” என பேசினார்.


