"ரூ.500 நோட்டுகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்!" – பரபரப்பை கிளப்பிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

 
Chandrababu Naidu proposes to establish a music university and a national award in commemoration of SPB

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: டிஜிட்டல் கரன்சி அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தவர்களில் நானும் ஒருவன். இதனை விரைவாக பரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டேன். மீண்டும் அதனை வலியுறுத்துகிறேன். தொடர்ந்து இந்த பிரச்னையை எழுப்புவேன். ரூ.500 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க வேண்டும். ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்க வேண்டும்.தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்தினால்,

நாட்டின் வளத்தை பெருக்குவது கடினமாக இருக்காது. வறுமையை எளிதாக ஒழிக்கலாம். அமைப்புகள் குறைபாடு உள்ளதாக மாறி ஊழலுக்கு வழிவகுக்கிறது. இதற்குதடை ஏற்படுத்த விரும்புகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி, புதிய வகை அரசியல் டிரெண்டை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் என்பது பணத்தினால் இருக்கக்கூடாது. சேவை அடிப்படையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.