ஆந்திர பேருந்து விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..!!

 
Q Q

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே சின்ன டிக்கூர் பகுதியில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த பைக் மீது ஆம்னி பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் ஆம்னி பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டது. தீ பஸ் முழுவதும் மளமளவென பரவிய நிலையில் அதில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். பல பயணிகள் தங்கள் உயிரை காத்துக்கொள்ள பஸ்சில் இருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொல்லா ரமேஷ் (35), அவரது மனைவி அனுஷா (30), குழந்தைகள் மன்விதா (10), மனிஷ் (12) ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.