ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் சகோதரி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

தெலுங்கானாவில் போட்டியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் சகோதரி சர்மிளா அறிவித்துள்ளார்.
ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி தலைவரும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா தெலங்கானாவில் 119 இடங்களிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று ஹைதராபாத் லோட்டஸ் பாண்ட் கட்சி அலுவலகத்தில் கட்சி அவரது கட்சி தலைவர்களுடன் ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டியின்
ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி, “ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியை தேற்கடிக்க வேண்டும் என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளேன். பாலேரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பொங்குலெட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டிக்கு ஆதரவு அளிக்கப்படும். இருப்பினுன் பாலேரு தொகுதி மக்களுடன் ஒரு நாள் எனக்காக வாக்குகள் பெற்று கொள்வேன்” என்றார்.
காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை இணைக்கு சர்மிளா திட்டமிட்டு இருந்தார். ஆனால் சர்மிளா நிபந்தனையை காங்கிரஸ் கட்சி ஏற்காததால் தனது நிலைப்பாட்டை மாற்றி 119 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதாக கூறி தனது கட்சிக்காக சின்னம் ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தார். தேர்தல் ஆணையமும் பைனாகுலர் சின்னம் ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.