“எங்க கொடிய கழட்டு”- ராமதாஸ் தரப்பு வேட்பாளரை ஓட ஓட விரட்டிய அன்புமணி ஆதரவாளர்கள்

 
ச்

பாமக கொடியுடன் வாக்கு சேகரிக்க வந்த ராமதாஸ் தரப்பு வேட்பாளரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அன்புமணி ஆதரவாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இராமதாஸ் தரப்பு வேட்பாளர் வாக்கு சேகரித்துவருகிறார். ந்தவாசி அருகே கீழ்கொவளைவேடு, சுண்ணாம்பு மேடு,தெல்லூர்,மும்முனி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இராமதாஸ் வேட்பாளர் முத்து பெருமாள் தனது நிர்வாகிகள்  மற்றும் தொண்டர்கள் கிராம கிராமமாக சென்று சிலிண்டர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். ப்போது மும்முனி கிராமத்திற்கு வேட்பாளர்  முத்து பெருமாள் வாக்கு சேகரிக்க வந்த போது அன்புமணி தரப்பு ஆதர்வாளர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி பாமக தூண்டு,பாமக கொடி பயன்படுத்த வேண்டாம் என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர் முத்து பெருமாள் தீடிரென சாலை மறியலில் ஈடுபட்டார். நாங்கள் பாமக கொடி, மற்றும் துண்டு நடுவில் இராமதாஸ் படம் உள்ளது அதனால் பயன் படுத்தி வருகிறோம் மற்றும் இராமதாஸ் பாமக கொடி மற்றும் துண்டு அறிமுகம் செய்து வைத்தார் என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வந்தவாசி - ஆரணி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  சாலை மறியலில் ஈடுபட்ட வேட்பாளரை சமாதானம் செய்து சாலை மறியலில்  இருந்து எழுப்பினர். பின்னர் இரண்டு ஆதரவாளர்களை போலீசார்  சமாதானம் செய்து காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அன்புமணி ஆதரவாளர்களிடம் இதற்கு தலைமை தேர்தல் அதிகாரி முடிவு செய்ய வேண்டும் மற்றும் நீங்கள் உங்கள் தலைமை முடிவு செய்ய வேண்டும் என்று கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இதனால் வந்தவாசி - ஆரணி சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இராமதாஸ் தரப்பு வேட்பாளர் முத்து பெருமாள் வாக்கு சேகரிக்க வந்த போது அன்புமணி ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தியதால் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.