6 மாவட்ட மக்களுக்கு அன்புமணி ராமதாஸ் கொடுத்த மெகா வாக்குறுதி..!
பாமக கட்சியின் தலைவர் அன்புமணி அறிக்கை:
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், புதிய மருத்துவ கல்லுாரிகளை தொடங்கவும், ஏற்கனவே உள்ள கல்லுாரிகளில், கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்தவும், தடையாக இருந்த விதியை, தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் புதிதாக உருவான, ஆறு மாவட்டங்களில், மருத்துவ கல்லுாரிகளை தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
அனைத்து மாவட்டங்களிலும், தலா ஒரு அரசு மருத்துவக் கல்லுாரி செயல்பட வேண்டும் என்பது பாமக, நோக்கம். பழனிசாமி தலைமையில் நடைபெற்ற, அதிமுக ஆட்சியில் மட்டும், 13 புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகள் தொடங்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில், ஒரு அரசு மருத்துவக் கல்லுாரி கூட தொடங்கவில்லை. புதிய மருத்துவக் கல்லுாரிகளை தொடங்க தடை, 2025ல் தான் நடைமுறைக்கு வந்தது.
திமுக அரசு நினைத்திருந்தால், அதற்கு முந்தைய 4 ஆண்டுகளில், ஆறு மாவட்டங்களிலும், அரசு மருத்துவக் கல்லுாரிகளை திறந்திருக்க முடியும். மக்கள் நலனிலோ, மாணவர்கள் நலனிலோ அக்கறை இல்லாத திமுக அரசு, அதை செய்யவில்லை. அடுத்த சில நாட்களில், மக்கள் நலனில் அக்கறை கொண்ட, புதிய அரசு அமைக்கப்பட்டதும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்துார், மயிலாடுதுறை, பெரம்பலுார், தென்காசி ஆகிய மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் தொடங்கும் நடவடிக்கையை பாமக மேற்கொள்ளும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

