கமல் ஹாசன் பிறந்தநாள் - அன்புமணி வாழ்த்து!!

 
tn

கமல் ஹாசன் பிறந்தநாளையொட்டி அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

kamal hassanஉலகநாயகன் கமல்ஹாசன் இன்று   தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.  இந்த சூழலில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் கமல் ஹாசனுக்கு திரையுலகினர் , அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், தமிழ்த் திரையுலகின் சாதனைச் சிகரமான கமல்ஹாசன் இன்று அவரது 69-ஆம் பிறந்தநாளை கொண்டாடும் வேளையில்,   அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நல்ல உடல் நலத்துடன் தமிழக மக்களுக்கு அவர் நீண்ட காலம் பணியாற்ற  எனது வாழ்த்துகள்! என்று குறிப்பிட்டுள்ளார்.