சந்திரபாபு நாயுடுவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

 
anbumani

ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன்  வெற்றி பெற்று  முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள தெலுங்குதேசம் கட்சித் தலைவர் திரு. சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

Chandrababu Naidu

ஆந்திர மாநிலத்தின் அரியணையை உறுதிப்படுத்தி உள்ளது  தெலுங்கு தேசம் கட்சி,  பாஜக , ஜனசேனா கூட்டணி.  175 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவையில்  சுமார் 156 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது.  தெலுங்கு தேசம் 130வது தொகுதிகளிலும்,  ஜனசேனா 20 தொகுதிகளிலும் , பாஜக ஏழு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரம் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.  இதன் மூலம் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை தோல்வியடைய செய்து,  மீண்டும் முதல்வர்  அரியணையில் ஏறுகிறார் சந்திரபாபு நாயுடு.


சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன்  வெற்றி பெற்று  முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள தெலுங்குதேசம் கட்சித் தலைவர் திரு. சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கடந்த ஆட்சிக்காலங்களில் நீங்கள் செயல்படுத்திய திட்டங்களும்,  2024 தேர்தலில் மக்களுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதிகளும் உங்கள் தலைமையிலான அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளன. ஆந்திர மக்களுக்கு நல்லாட்சி வழங்க எனது வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.