வைகோ விரைவில் உடல் நலம் பெற்று பொதுவாழ்வை தொடர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

 
வைகோ

வைகோ விரைவில் உடல் நலம் பெற்று பொதுவாழ்வை தொடர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் மேல்சபை தேர்தல் - வைகோ, அன்புமணி எம்.பி. ஆகிறார்கள் | Next  month Rajya Sabha election Vaiko and Anbumani MP

இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலிங்கப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக துரை வைகோ  வெளியிட்ட அறிவிப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். வைகோ அவர்களுக்கு சென்னையில் மேற்கொள்ளப்படவுள்ள  அறுவை சிகிச்சை வெற்றி பெற வேண்டும். வைகோ அவர்கள் விரைவில் முழுமையாக குணமடைந்து பொதுவாழ்வை தொடர வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார்.