ஏன் எங்களுக்கு வாக்களிக்க மறுக்கிறீர்கள்? - ஆதங்கப்பட்டுப் பேசிய அன்புமணி ராமதாஸ்

ஏன் எங்களுக்கு வாக்களிக்க மறுக்கிறீர்கள்? உங்களுக்கு நாங்கள் என்னதான் செய்ய வேண்டும்? என வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் சோழ மண்டல சமய-சமுதாய நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. பாமகவின் அடுத்த மாநாடு மாமல்லபுரத்தில் மே 11ம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடாக நடைபெறும் என அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி அறிவித்தார். இந்த விழாவில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு (Census) வேண்டும் எனக் கேட்கவில்லை. சாதிவாரி சர்வே எடுங்கள் என்றுதான் கேட்கின்றோம். பீகார், தெலங்கானாவைப் போல சாதிவாரி சர்வேவை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.
#Watch | "ஏன் எங்களுக்கு வாக்களிக்க மறுக்கிறீர்கள்? உங்களுக்கு நாங்கள் என்னதான் செய்ய வேண்டும்?"
— Sun News (@sunnewstamil) February 23, 2025
கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் சோழ மண்டல சமய-சமுதாய நல்லிணக்க மாநாட்டில், விவசாயிகளிடம் ஆதங்கப்பட்டுப் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.#SunNews | #PMK |… pic.twitter.com/YuE3EfoS6e
ஏன் எங்களுக்கு வாக்களிக்க மறுக்கிறீர்கள்? உங்களுக்கு நாங்கள் என்னதான் செய்ய வேண்டும்? இந்த மாநாடு வெறும் டிரெய்லர்தான். மெயின் பிக்சர் அடுத்த மாநாட்டில் நடைபெற உள்ளது. அடுத்த மாநாடு மாமல்லபுரத்தில் மே 11 ஆம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடாக நடைபெறும். 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.