தமிழகத்திலேயே பெரிய பா.ம.க கொடியை ஏற்றினார் அன்புமணி ராமதாஸ்
Feb 25, 2025, 09:13 IST1740455030812

தமிழகத்திலேயே பெரிய பா.ம.க கொடியை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்றி வைத்தார்.
அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் தமிழகத்திலேயே மிகப்பெரிய பாமக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பாமக கொடியை ஏற்றி வைத்தார். 85 அடி உயர் கொடி கம்பத்தில் 30 அடி நீளமும், 25 அடி கலமும் கொண்ட தமிழகத்திலேயே பெரிய பா.ம.க கொடியை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்றி வைத்தார்.
இதனை தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காடுவெட்டி குருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாமக நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.