இராஜராஜ சோழனின் பிறந்தநாளில் நமது ஆட்சியை நிறுவ உறுதியேற்போம் - அன்புமணி ராமதாஸ்

 
Anbumani Ramadoss Anbumani Ramadoss

இராஜராஜ சோழனின் பிறந்தநாளில் நமது ஆட்சியை நிறுவ உறுதியேற்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிபிட்டுள்ளார். 

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய பெரும்பள்ளி இராஜராஜ சோழனின் 1039-ஆம் #சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது. கடல் கடந்து வெற்றிகளை குவித்ததன் மூலம் நம் குலப்பெருமையை உலகுக்கு உணர்த்தியவன் அவன்.  


பாசனத் திட்டங்களுக்கு  முன்னோடியாக  திகழ்ந்தவன். நாமும் கடுமையாக  உழைப்போம்... நமது ஆட்சியை நிறுவுவோம். மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவோம் என அன்புமணி ராமதாஸ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.