3-வது நாளாக அன்புமணி ராமதாஸ் ஆலோசனை

 
மண்ணைக் காக்க மண்டியிடாமல் போரிட்ட மருது சகோதரர்கள்.. வீரவணக்கம் செலுத்துவொம் - அன்புமணி..!!

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக கட்சியை பலப்படுத்த பாமக அதிரடியாக திட்டமிட்டு வருகிறது.

 அன்புமணி

மூன்றாவது நாளாக இன்று டெல்டா மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். 110 மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் அதிரடி ஆபரேஷனில் இறங்க பாமக திட்டமிட்டுள்ளது. சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட இருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. துடிப்பாக செயல்படுபவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கவும் அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.


இதுவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், மூன்றாவது நாளாக இன்று டெல்டா மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்.