ஜனநாயகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பவை ஊடகங்கள் தான் - அன்புமணி ராமதாஸ்!

 
anbumani

நெருக்கடிகளுக்கு நடுவே அஞ்சாமல் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் போற்றப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 16ம் தேதி தேசிய பத்திரிக்கை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேசிய பத்திரிக்கை தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்தியாவில் ஜனநாயகத்தைக் காக்கும் மூன்று தூண்கள் நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவை தான். அவை மூன்றும் தங்களின் கடமையிலிருந்து தவறினாலும் கூட  ஜனநாயகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பவை ஊடகங்கள் தான் என்பதாலேயே அவை நான்காவது தூணாக போற்றப்படுகின்றன. 


இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்காக அச்சுறுத்தல்களுக்கும், நெருக்கடிகளுக்கும் நடுவில் பணியாற்றும்  ஊடகவியலாளர்கள் போற்றப்பட வேண்டும். அவர்களுக்கு தேசிய  பத்திரிகையாளர் நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.