சிம்பொனி இசை படைத்த இளையராஜாவுக்கு வாழ்த்து - அன்புமணி ராமதாஸ்!

 
ilayaraja ilayaraja

இன்றைய நிலையில் சிம்பொனி சாதனை அவரது உச்சமாக இருந்தாலும் இனிவரும் காலங்களில் அவர் மேலும் பல உச்சங்களை அடைவார் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இசையுலக சாதனைகளின் உச்சமாக லண்டனில் வேலியண்ட் என்ற தலைப்பில்  சிம்பொனி இசையை  இசைக்கடவுள் இளையராஜா அரங்கேற்றியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இளையராஜாவின் இசை வரலாற்றில் உச்சங்களுக்கு வரம்பு எதுவும் கிடையாது. ஒவ்வொரு முறை உச்சத்தை அடையும் போது அடுத்த இலக்கை நோக்கி வெற்றிகரமாக முன்னேற்றுவது தான் அவரது இயல்பாக இருந்திருக்கிறது. இன்றைய நிலையில் சிம்பொனி சாதனை அவரது உச்சமாக இருந்தாலும் இனிவரும் காலங்களில் அவர் மேலும் பல உச்சங்களை அடைவார். அதற்காக அவருக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.