தந்தை - மகன் மோதல் முடிவுக்கு வந்ததா? அன்புமணியை ஆரத்தழுவி வரவேற்ற ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டுக்கு அன்புமணி வருகை புரிந்தார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி குடும்பத்துடன் வருகை புரிந்தார். பாமக தலைவர் அன்புமணியை ஆரத்தழுவி வரவேற்றார் தந்தையும் கட்சியின் நிறுவனருமான ராமதாஸ். இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி சுமார் 3 நிமிடங்கள் கண்ணீர்விட்டு அழுததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியின் 61ஆவது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெற குடும்பத்துடன் தைலாபுரம் சென்றார் அன்புமணி. 2 ஆண்டுகளாக தந்தை- மகனுக்கு இடையில் மோதல் நீடித்துவந்த நிலையில், இச்சந்திப்பு நடந்துள்ளது.
தந்தையை சந்தித்துவிட்டு வந்த அன்புமணியிடம், ராமதாஸ் உடனான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்ததா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இனி நல்லது நடக்கும் என்றார். அப்பா, அம்மாவுடைய திருமண நாள் என்பதால் குடும்பத்துடன் சென்று ஆசிர்வாதம் பெற்றோம் என்றும் அன்புமணி கூறினார்.

