#BREAKING ராமதாஸுடன் அன்புமணி மீண்டும் சந்திப்பு

 
ச்

பாமக நிறுவனர் ராமதாஸை அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். 

Image

பாமக நிறுவனர் ராமதாஸை அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. பாமகவின் 38வது ஆண்டு விழாவையொட்டி, கட்சி பணிகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும் பாமகவின் அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ஆம் நாள் 37 ஆண்டுகளை நிறைவு செய்து 38-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மை சமூக மக்களின் முன்னேற்றத்தையும், மது ஒழிப்பையும் நோக்கமாகக் கொண்டு தான் ராமதாஸ், 1989-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் நாள் கடற்கரை சீரணி அரங்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடதக்கது