100 நாட்களுக்கான நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி!
பா.ம.க. நிறுவனர் ராமதாசின் எதிர்ப்பையும் மீறி அவரது பிறந்த நாளில் "உரிமை மீட்க, தலைமுறை காக்க" நடைபயணத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார்.
ராமதாஸ் எதிர்ப்பையும் மீரி திருப்போரூர் முருகன் கோவிலில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு ‘உரிமை மீட்க தலைமுறை காக்க ‘ என்கிற நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டபடி தொடங்கினார். அன்புமணி நடைபயணத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களில் ராமதாஸ் பெயரில்லை. வட தமிழகத்தில் 100 நாட்களுக்கான நடைபயணத்தை மேற்கொள்ள அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு தனது முதல் நாள் வெற்றி பயணத்தை தொடங்கிய அன்புமணிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருப்போரூர் முருகப்பெருமானை வணங்கி, அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு தனது முதல் நாள் வெற்றி பயணத்தை தொடங்கிய மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்.!#உரிமைமீட்க#தலைமுறைகாக்க #அன்புமணியின்100நாள்நடைபயணம் pic.twitter.com/PfnEP7M46a
— பூபால் பழனி ஊடகப் பேரவை (@boopal888pmk) July 25, 2025
இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 1. சமூக நீதிக்கான உரிமை, 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, 3. வேலைக்கான உரிமை, 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை , 5. வளர்ச்சிக்கான உரிமை, 6. நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை ,8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை , 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை , 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 வகையான அடிப்படை உரிமைகளையும் தமிழ்நாட்டு மக்களுக்கு மீட்டுக்கொடுக்க வேண்டி புதிய பிரச்சார பயணத்தை தொடங்கினார்.


