"பெண்களுக்கு பிரச்னை என்றால் என் மனைவி பத்ரகாளியாக மாறிடுவாங்க"!!

 
tn

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட வருகின்றன.  பாஜக கூட்டணியுடன் கைகோர்த்துள்ள பாமக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.  குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது மகள்களும் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

t

இந்நிலையில் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட கணவர் அன்புமணி ராமதாஸ், பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அதற்கு முதல் ஆளாக சென்று நியாயத்தை பெற்று தருபவர்  சௌமியா அன்புமணி. அதுல மட்டும் அவர் விட்டுக் கொடுக்க மாட்டார்.  பெண்களுக்கு பிரச்சனை என்றால் அவர் பத்ரகாளியாக மாறிடுவார். அவ்வளவு கோபம் வரும்.  அதுவும் பெண் குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை என்றால் போராட்டம் நடத்துங்கள் என்று அவர் சொல்லுவார்.  அவருக்கு தூக்கமே வராது. 

tn

அப்படிப்பட்டவரை உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் மாற்ற வேண்டும். இது என்னுடைய ஆசை மட்டும் அல்ல. இது உங்களுடைய ஆசையாகவும் இருக்கிறது என்பது  எனக்கு நன்றாக தெரியும்.  எதிரணியில் உள்ள வேட்பாளரை நான் மதிக்கின்றேன். ஆனால் அவருக்கு அனுபவம் கிடையாது உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள் என்றார்.