'மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்' என பெயர் சூட்டவேண்டும்- அன்பில் மகேஸ்

 
anbil magesh anbil magesh

முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்கு ஸ்டாலின் காலை உணவு திட்டம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

Image

இடுதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த திட்டமான "முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை" இன்று ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவுப் படுத்தியுள்ளார்கள். இதன் மூலம் புதிதாக 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.23 இலட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக 34,987 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 22 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைகிறார்கள்.

Anbil Mahesh Poyyamozhi,அன்பில் மகேஷிடம் ஸ்டாலின் சொல்லி விட்ட மெசேஜ்! - mk  stalin message to students who write public exam - Samayam Tamil

22 இலட்சம் மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கி, அவர்களின் பெற்றோர்களுக்கு மன நிறைவை தந்துள்ள தமிழ்நாட்டின் தாயுமானவர் மு.க.ஸ்டாலின் அவர்களை வணங்குகின்றோம். இத்திட்டம் இந்திய ஒன்றியத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டும் திட்டமாக அமைந்துள்ளது. சட்டமன்றத்தில் தெரிவித்ததை இங்கே மீண்டும் பதிவு செய்கின்றேன். இந்த மகத்தான திட்டத்திற்கு "மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்" எனும் பெயர் சூட்ட வேண்டும். கடல் தாண்டி உலகம் முழுக்க இத்திட்டம் பரவ வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.