“அரசுப் பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் இத செய்யுங்கள்”- ஆளுநருக்கு அன்பில் மகேஷ் பதிலடி

 
அமைச்சர் அன்பில் மகேஷ்

கமலாலயத்தின் ASER எனும் போலி அறிக்கையை உயர்த்திப்பிடிக்கும் நீங்கள், அரசுப் பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி “தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?” என்று கேளுங்கள் என ஆளுநர் ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

minister anbil mahesh reply to tn governor, மாநில பாடத்திட்டத்தின் தரம்  பற்றி விமர்சித்த கவர்னர்- பதிலடி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ், “ஆர்.எஸ்.எஸ். மனநிலையுடன் எப்போதும் அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பும் ஆளுநர் அவர்களே…!ஏழை மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை உள்ளவர் போல, “நானும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன்” என்பதை காட்டிக்கொள்வதற்காக நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கல்வித்துறையை நோக்கி இப்படி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது. எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது. சாதனையாளர்களை மக்களும் #DravidianModel அரசும் கொண்டாடி வருகிறது.கமலாலயத்தின் ASER எனும் போலி அறிக்கையை உயர்த்திப்பிடிக்கும் நீங்கள், அரசுப் பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி “தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?” என்று கேளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக ஆளுநர் ரவி, “தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் தேசிய சராசரியைவிட மிகவும் குறைவாக உள்ளது.  50 சதவீதத்துக்கும் அதிகமான உயர்நிலைப்பள்ளி மாணவர்களால் 2 இலக்க கூட்டல் கழித்தலைக் கூட செய்ய முடியவில்லை. ஏழைகளுக்கு எதிராக சமூகப் பாகுபாடு உள்ளது. இளைஞர்களிடம்  போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.