"முழுக்க முழுக்க False case" - அன்பில் மகேஷ் பேட்டி

 
"முழுக்க முழுக்க False case" - அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணைக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டியளித்துள்ளார்.

ஏழு மணி நேர விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், “பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது ரிவ்யூ மீட்டிங் நடந்த ஆவணங்களை வைத்திருந்தேன். பட்ஜெட் முடிந்த பிறகு ஒரு ரிப்போர்ட் தயார் செய்து வைத்திருந்தேன். அதையெல்லாம் எடுத்து சென்றிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க பொய்யான வழக்கு. மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சொன்னார்கள். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறேன். இது முழுக்க முழுக்க False case. என்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்டேன். 246 கேள்விகள் அதிகாரிகள் என்னிடம் கேட்டார்கள். வரிசையாக 246 கேள்விகள் கேட்டு பதில் பெற்றுள்ளனர். மொத்தம் 295 கேள்விகளை கேட்க காவல்துறை திட்டமிட்டு உள்ளது. அடுத்த 40 கேள்விகள் என்ன கேக்கப்போறாங்கனு தெரியவில்லை. காவல்துறை மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக தயார். காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்” என்றார்.