“முதலில் இதை செய்யுங்க... அப்பறம் அமெரிக்க அதிபர் கூட ஆகலாம்”- அன்பில் மகேஷ்
வருங்கால முதலமைச்சர் என்று சொல்லி சொல்லி முதலமைச்சராக ஆகிவிட்டீர்கள். அடுத்தது PM-ஆ.? என அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், “புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு தொடக்கத்தில் சட்டமன்ற அனுபவம் இல்லாமல் இருக்கலாம். அதனை காரணமாகக் கூற முடியாது. வருங்கால முதலமைச்சர் என்று சொல்லி சொல்லி முதலமைச்சராக ஆகிவிட்டீர்கள். அடுத்தது PM-ஆ.? முதலமைச்சர் விஜய் தமிழகத்திற்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு, அதன் பிறகு இந்திய பிரதமராகவோ, அமெரிக்க அதிபராகவோ ஆகலாம். மக்கள் பிரச்னைகள் குறித்து பேசும் இடமாக சட்டமன்றம் இருக்க வேண்டும்; எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை திசைதிருப்பாமல் அமைச்சர்கள் நேரடியாக பதில்கூற வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசும் இடமாக சட்டமன்றம் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை திசைதிருப்பாமல் அமைச்சர்கள் நேரடியாக பதில் கூற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

