அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிச. 2 வரை நீதிமன்றக் காவல்
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு டிசம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அன்பில் மகேஷ், பி.டி. அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் மற்றும் கார் ஓட்டுநர் சரவணன் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கில் அன்பில் மகேஷ், முத்துக்குமார் மற்றும் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு டிசம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. முத்துக்குமாருக்கு டிச. 10 வரையும், சரவணனுக்கு டிச.9 ஆம் தேதி வரையும் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தர பணம் பெற்று முறைகேடு செய்ததாக தொடரப்பட்டவழக்கில் சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

