#BREAKING "தன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை"- ஜாமின் கோரி அன்பில் மகேஷ் மனு

 
அன்பில்

ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.. தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்வு, DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி,பல கோடி பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய B.T.அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் ஜாமின் கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மனு தாக்கல் செய்துள்ளனர்.  அன்பில் மகேஷ் தாக்கல் செய்த ஜாமின் மனு வரும் வியாழன் அன்று விசாரணைக்கு வர உள்ளது.  தன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் 
இல்லை. தனியார் பள்ளிகளின் கோரிக்கைகள் மீது பள்ளிக்கல்வித்துறை வழக்கமான நடவடிக்கையே எடுத்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள், தனது பெயரை தவறாக  
பயன்படுத்தியதற்கு பொறுப்பேற்க முடியாது. எனக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுவதால் ஜாமின் வழங்க வேண்டும் என ஜாமின் மனுவில் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.