மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

 
anbil

மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில்  இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனிடையே மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்க முடியும் என மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக திமுக-பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அரசுப் பள்ளியில் படித்து இரு மொழி கொள்கையை பின்பற்றியவர்களே இஸ்ரோ உள்பட அனைத்து உயர் அமைப்புகளில் பொறுப்பில் உள்ளனர்.  மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. மீண்டும் ஒரு மொழிப்போரை ஒன்றிய அரசு கொண்டு வந்துவிடக் கூடாது என கூறினார்.