“தவறான தகவல்களை பரப்புவதால் உண்மைகள் மாறாது”- தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஸ் பதில்

 
அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ ஒப்புதல் தந்த கடிதத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். 

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ், “15/3/2024 தேதியிட்ட கடிதம் புதிய கல்விக்கொள்கைக்கான ஒப்புதல் அல்ல. எங்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. குழு அமைக்கப்படும் என்றும், அதன்படி முடிவெடுக்கப்படும் என்றுதான் கடிதத்தில் கூறியிருந்தோம். தமிழ்நாட்டின் கல்வி மாதிரியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால், தேசிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம்.


எங்களது நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் இல்லை. மாணவர்களுக்கு நன்மை பயக்கும் போது மட்டுமே தமிழ்நாடு மத்திய திட்டங்களில் ஈடுபடுகிறது. தமிழ்நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அங்கீகரித்து ஆதரிப்பதன் மூலம், நீங்கள் உண்மையில் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் அதன் மாணவர்களுக்கும் ஒரு சிறந்த சேவையைச் செய்வீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.