“உங்கள் குரல்... உங்கள் உரிமை”- நாளை கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஆனந்த் அழைப்பு

 
ச்

நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் தங்கள் கிராமங்கள் மேம்பட கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் என்.ஆனந்த் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அமைச்சர் என்.ஆனந்த் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் தங்கள் கிராமங்கள் மேம்பட கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கிராம சபை சிறக்கட்டும்!கிராமங்கள் செழிக்கட்டும்!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.