இப்படியா சாவு வரணும்! குளவி கொட்டி மூதாட்டி பலி
Aug 20, 2025, 17:00 IST1755689454000
திருவள்ளூர் அருகே விறகு சேகரிக்க சென்ற மூதாட்டி குளவி கொட்டி சிகிச்சை பலனின்றி பலியானது சோகத்தை ஏற்படுத்துள்ளது.

திருவள்ளூர் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ராஜேஸ்வரி (80). இவர் நேற்று முன் தினம் அதே பகுதியில் உள்ள ஏரி பகுதியில் வீட்டிற்கு விறகு வெட்டிய போது கூட்டில் இருந்து பறந்து வந்த 20 மேற்பட்ட குளவிகள் மூதாட்டியை கொட்டி உள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், இரவு சிகிச்சை பலனின்றி பலியானார். பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு பென்னாலூர்பேட்டை போலீசார் மூதாட்டி உடலை உறவினரிடம் ஒப்படைத்தனர்.

