குப்பைகளை அகற்ற சென்ற முதியவர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு பலி

 
குப்பைகளை அகற்ற சென்ற முதியவர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு பலி குப்பைகளை அகற்ற சென்ற முதியவர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு பலி

மதுரை பந்தல்குடி பகுதியில் கால்வாயில் விழுந்த நபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாநகர் கோரிப்பாளையம் அருகே உள்ள பந்தல்குடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன்‌ (45).  கட்டிட தொழிலாளியாக பணி செய்து வருகிறார். மதுரையில் பெய்த தொடர் மழையால் பந்தல் குடி கால்வாயில் நீரோட்டம் அதிகரித்திருந்தது. இன்று காலை  பந்தல்குடி கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் புகுந்தது.

இந்நிலையில் கால்வாயில் பாலத்தில் நடுவே இருந்த குப்பைகளை அகற்றுவதற்காக மதியம் 3 மணி அளவில் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர்  குப்பை அடைப்பினை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது திடீரென கால்வாயில் பாண்டியராஜன் தவறி விழுந்தார். சம்பவம் அறிந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் நீருக்குள் மூழ்கிய பாண்டியராஜனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக அவரது உடல் கிடைக்காதால் அதிருப்தி அடைந்த அவரது உறவினர்கள் போராட்டத்திலும் போலீசாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சமாதானப்படுத்திய போலீசார்  சுமார் 3 மணி நேரமாக நீரில் மூழ்கி சடலமாக இருந்தவரை போராடி மீட்டனர்.