ஒரு கிராமமே சேர்ந்து நோட்டாவுக்கு ஓட்டுப்போட்ட சம்பவம்!
உதகை அருகே தேர்தலை புறக்கணித்த அஜ்ஜூர் கிராம மக்களுடன் தேர்தல் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் நோட்டாவுக்கு தங்களது வாக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அஜ்ஜூர் கிராமத்தை வன பகுதியாக அறிவித்து காலி செய்ய கோரி வனத்துறையினர் நோட்டீஸ் அளித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் அந்த கிராமத்தை சேர்ந்த 818 வாக்காளர்கள் வாக்களிக்காமல் புறக்கணித்து வந்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராமசந்திரன் ஆகியோர் அஜ்ஜூர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அஜ்ஜூர் கிராம பிரச்சனையை தீர்த்து தர நடவடிக்கை எடுக்கபடும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் தங்களது வாக்குகளை நோட்டாவுக்கு செலுத்துவதாக கூறி சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு வாக்குசாவடிக்கு சென்று வாக்களிக்க தொடங்கி உள்ளனர். இதனால் இன்று காலை முதல் வெறிச்சோடி காணபட்ட அஜ்ஜூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி வாக்குசாவடியில் வாக்குபதிவு விறு விறுப்பாக பதிவாகி வருகிறது.

