பைக்கில் சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணியை தூக்கி வீசிய யானை!

 
ச்

கோவை மாவட்டம் வால்பாறைக்கு பொள்ளாச்சி பகுதியில் இருந்து பைக்கில் வந்த சுற்றுலாப்பயணியை வாட்டர்பால் எஸ்டேட் டைகர் பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் பைக்கோடு தாக்கியதில் பைக் துாக்கிவீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். 


வால்பாறை பகுதிக்கு இயற்கை விரும்பும் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து உள்ளது. இந்நிலையில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாடகை பைக்கை கொச்சின், பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாடகைக்கு எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஜெர்மன் சுற்றுலா பயணிகள் வாட்டர்பால்ஸ்  டைகர் பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் பைக்கில் கடந்த போது பக்கத்தில் நின்ற யானை பைக்கை தாக்கியதில் பைக் மாற்று பகுதியில் விழுந்தது. அவரும் விழுந்தார். மேலும் யானை அவர் அருகில் சென்று தாக்கியதாகவும் பார்தவர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் பலத்த காயத்துடன் மீட்க்கப்பட்ட அவரை  வாட்டர்பால்ஸ் எஸ்டேட் தோட்ட மருத்துவமனையில் சேர்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக வனத்துறையினர் பொள்ளாச்சி கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் மற்றும் வனத்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.  பெயர் மைக்கேல் (60) எனவும், ஜெர்மனியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.