திடீரென தீப்பிடித்து எரிந்த மின்சார கார்!

 
அ

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் நல்லமல்லா மலைப்பாதை சாலையில் மின்கசிவு காரணமாக திடிரென கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குண்டூரைச் சேர்ந்த பக்தர்கள் இன்னோவா காரில் ஸ்ரீசைலம் பிரம்மராம்பா சமேத மல்லிகார்ஜுன சாமி கோயிலுக்கு  சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கார் ஸ்ரீசைலம் மலைப்பாதை சாலையில்  ​​சின்னருட்லா அருகே சென்றபோது  கார் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு  காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக முதலில் புகை வந்தவுடனே பக்தர்கள்  காரில் இருந்து கீழே இறங்கியதால் உயிர் சேதம் ஏற்படாமல் அனைவரும் மயிரிழையில் தப்பினர். 

தீ விபத்தில் கார் முற்றிலுமாக எரிந்து சேதமானது தாங்கள் அதுவரை பயணம் செய்த கார் தங்கள் கண்முன்னே எரிந்ததை பார்த்து அதில் வந்தவர்கள் கலங்கி நின்றனர். போலீசார் , தீயனைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.