திருச்சியில் அதிர்ச்சி! வகுப்பறையில் மயங்கி விழுந்து 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

 
death

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு பள்ளி மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சன் குறிச்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம், மகன் 13 வயதுடைய வெற்றிவேலன். இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். சிறு வயதிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த வெற்றிவேலனுக்கு அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.


இந்த நிலையில் வழக்கம் போல இன்று பள்ளிக்குச் சென்ற வெற்றி வேலன் வகுப்பறையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வகுப்பு ஆசிரியர் வெற்றிவேலனை உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.