தூங்கிய தாய், தந்தை! தண்ணீர் பக்கெட்டில் விழுந்து 11 மாத குழந்தை பலி

 
தூங்கிய தாய், தந்தை! தண்ணீர் பக்கெட்டில் விழுந்து 11 மாத குழந்தை பலி

சென்னையில் தண்ணீர் பக்கெட்டில் விழுந்து 11 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்த் ஏற்படுத்தியுள்ளது.

baby leg

சென்னை சேலையூர் மகாலட்சுமி நகர், முத்தமிழ் தெரு பகுதி சேர்ந்தவர்கள் விஸ்வநாதன் - உமா தேவி தம்பதி. இவர்களது 11 மாத பெண் குழந்தை அர்ச்சனா. விஸ்வநாதன் - உமா தேவி தம்பதி, நேற்று இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளனர். இரவில் பெற்றோருடன் உறங்கிய குழந்தை தூக்கத்தில் முழித்து வெளியில் சென்று தண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்து விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தது. 

கணவன்- மனைவி குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அதிகாலை குழந்தையை காணவில்லை என தேடிய போது பக்கெட்டில் மூழ்கி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். குழந்தை உயிரிழந்தது குறித்து சேலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.